டிக்டாக் உள்ளிட்ட ஆப்ஸை மிஸ் செய்கிறீர்களா? அசத்தலான ஆப்ஸ் பட்டியல் இதோ..
கல்வான் பள்ளத்தாக்கை ஒட்டிய இந்தியா-சீனா முரண் காரணமாக நடந்த விளைவுகளில் ஆப்ஸ் தடையும் ஒன்று. டிக்டாக் உள்ளிட்ட 59 ஆப்கள் காணாமல் போனதால், அதில் சில ஆப்களை மிஸ் செய்கிறீர்களா? அதிகம் பயன்படக்கூடிய, அசத்தலான ஆப்ஸுக்கு கொஞ்சம் அறிமுகமாகுங்கள். இதோ சில ஆப் பரிந்துரைகள்…
- Buffer: Social Media Manager:
Buffer: Social Media Manager ஆப்பை பயன்படுத்தி மூலம் உங்கள் எல்லா சோஷியல் மீடியா ஆப்களையும் நீங்கள் ஒரே இடத்தில் மேனேஜ் செய்யலாம்.ிந்த ஆப்பைப் பயன்படுத்தி நீங்களண்ட்போடும் பதிவையும் திட்டமிடலாம். உங்களுடைய கண்டெண்ட்டுக்கு எவ்வளவு ரீச் கிடைக்கிறது என்றும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பி்ன் இண்ட்ரெஸட் மற்றும் லின்க்டுஇன் போன்றவைகளை ஒரே இடத்திலிருந்து கண்காணித்து கொள்ளலாம்.
சோஷியல் மீடியாவில் ஒரு ரவுண்டு வர ரெடியா?
- SayCheese
SayCheese ஆப் என்பது உங்கள் மொபைலுடன் மற்றொரு நபரின் மொபைல் கேமராவை தூரத்தில் இருந்தே கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஆப். இந்த ஆப் பயன்படுத்தி நீங்கள் ஃபோட்டோகிராஃபர் இல்லாமலேயே படங்களைக் கிளிக் செய்யலாம்.போஸ் கொடுக்க ரெடிதானே?
- Simple Habit
சிறந்த உளவியல் நிபுணர்கள், தியான வழிகாட்டிகள், லைஃப்ஸ்டைல் குருக்கள், தூக்கத்துக்கான வழிகள், சின்ன சின்ன ரிலாக்ஸிங் தெரபி என வழிகாட்டும் ஒரு கைடிங் ஆப் தான் Simple Habit
இந்த ஆப் உங்களுடைய லாக்டவுன் காலத்து ப்ரெண்டா மாற நிறைய சான்ஸ் இருக்கு..