கொரோனாவால் உயிரிழந்த ஆயுதப்படை காவலர் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்..!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களும் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா நோய் தொற்றால் ஆயுதப்படை காவலர் ஒருவர் பலியாகி உள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயுதப்படை காவலர் நாகராஜன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

அவரது மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆயுதப்படை காவலர் நாகராஜன் அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply