இளம் விஞ்ஞானிகள் தேர்வு : பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு..!

குமரி அறிவியல் பேரவை சார்பில், இளம் விஞ்ஞானிகள் தேர்வுக்கான தேர்வில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இப்பேரவை சார்பில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து, ஆண்டுதோறும் இளம் விஞ்ஞானிகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

நிகழாண்டுக்கான இளம் விஞ்ஞானி மணவர்களை தேர்வு செய்யும் வகையில் குமரி மாவட்ட பள்ளிகளின் முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் குமரி அறிவியல் பேரவை நிர்வாகிகள் பங்கேற்ற காணொலி வாயிலான கூட்டத்துக்கு அமைப்பின் அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு.வேலையன் தலைமை வகித்தார். கூட்டத்தில், வருகிற 11 மற்றும் 12ஆம் தேதிகளில் இளம் விஞ்ஞானி மாணவர்கள் தேர்வுக் கான அறிமுகக் கருத்தரங்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

ஒரு பள்ளியிலிருந்து 8ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்கள் பள்ளி முதல்வர் அல்லது தலைமையாசிரியரின் அனுமதி கடிதத்துடன் கலந்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 99427 – 58333 என்ற செல்லிடப் பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் ஜெயலால், தக்கலை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சுஜின் ஹெர்பர்ட், இஸ்ரோ விஞ்ஞானிகள் பென்சிகர் ராஜன், புதியவன், பெருமாள், பணிநிறைவு விஞ்ஞானி பால்வண்ணன், மூடோடு சிக்மா ஆர்க்கிடெச்சர் கல்லூரித் தலைவர் ஜேம்ஸ் வில்சன், சமூக விஞ்ஞானி எட்வின்சாம், கல்வியாளர் ஜோபிரகாஷ், ஜாண்சன், தன்யா, ரேகா, தீபா, ரேகா, ஜாண் ரபிகுமார், சுனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply