‘வெல்டிங் வைத்து ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி’.. ரூ.6 லட்சம் பணம் எரிந்து நாசம்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பாச்சல் என்னும் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் கார்ப்பரேஷன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம் செயல்பட்டு வருகிறது. அந்த ஏ.டி.எம்மில் இன்று காலை ரூ.6 லட்சம் மதிப்புள்ள பணம் எரிந்து நாசமாகியுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனே அங்குச் சென்ற போலீசார், பணம் எரிந்து நாசமாகி இருப்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மின் கசிவால் பணம் எரிந்ததா அல்லது கொள்ளை முயற்சியில் எரிந்ததா என விசாரித்துள்ளனர்.

அப்போது, 4 பேர் கொண்ட கும்பல் ஏ.டி.எம்மில் வெல்டிங்கை வைத்து உடைத்துக் கொள்ளையடிக்க முயன்ற போது தீ பிடித்துள்ளது. அதன் காரணமாக ஏ.டி.எம்மில் இருந்த ரூ.6 லட்சம் பணமும் எரிந்து நாசமாகியது தெரிய வந்துள்ளது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply