மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது. சாதராண மக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் என அனைவருக்கும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், சமீப காலமாக அரசியலில் இருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் பரவி வருகிறது.

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ பழனி கொரோனாவால் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா பரவியது. அதனைத் தொடர்ந்து பரமக்குடி, உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏக்களுக்கும் கொரோனா உறுதியானது.

இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அரச்சுணனுக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரது மகள், மருமகள் மற்றும் பேத்தி மதுரை சென்று வந்ததால் அவர்களுக்கு கொரோனா தொற்று பரவி, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்து எம்.எல்.ஏ அரச்சுணனுக்கும் தற்போது பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply