மதுராந்தகம் பெண் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் திமுகவிலிருந்து இடைநீக்கம்- மு.க.ஸ்டாலின்

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த நைனார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா (47). இவரது மகள் சசிகலா (26). இவர் கடந்த 24ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் உடலை கைப்பற்றி மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தனது தங்கையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது சகோதரர் செய்யூர் காவல் நிலையத்தில் புகா் அளித்தார். அந்த புகாரில், திமுகவை சேர்ந்த தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருஷாேத்தமன் ஆகியோர் என் தங்கையை கொலை செய்து விட்டு நாடகமாடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதனிடையே, தேவேந்திரனும், புருஷோத்தமனும், சகிலா குளிக்கும்போது வீடியோ எடுத்து அவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும், வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியதாகவும், சமீபத்தில் சசிகலாவுக்கு திருமண ஏற்பாடு செய்ததாகவும் அதனால் அவரை தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் என்றும் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் இடைக்கழிநாடு பேரூர்க் கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி. தேவேந்திரன் மற்றும் டி. புருஷோத்தமன் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அவர்கள் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply