கோட்டார் காவல் நிலைய போலீசார் 50 க்கும் மேற்பட்ட ஏழை எளியோர் பசியாற உணவு வழங்கினர்

இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக உணவு கிடைக்காமல் வீதியிலும் பேருந்து நிலையங்களிலும் வாழும் மக்களுக்கு கோட்டார் காவல் நிலைய போலீசார் மதிய உணவை 50 க்கும் மேற்பட்ட ஏழை எளியோர் பசியாற வழங்கியுள்ளனர்.

இதில் கோட்டார் காவல்நிலைய ஆய்வாளர்.திரு.செந்தில்குமார் அவர்களின் உத்தரவின் பேரில் எஸ்.ஏ.சரவணகுமார் அவர்கள் எஸ்.ஏ.அருணாசலம் அவர்கள் மற்றும் போலீஸ் சுபாஷ் அவர்கள் வழங்கியுள்ளனர்.

போலீஸ் அதிகாரிகளிலும் தன்னலம் பாராமல் இவர்களை போல பலர் பணியாற்றுவதைக் கண்டு பாராட்டும் பொதுமக்கள்.

Leave a Reply