குமரியில் புதிதாக 51 பேருக்கு தொற்று பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு நேற்று ஒரே நாளில் 34 பேர் டிஸ்சார்ஜ்!

குமரி மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. புதிதாக 39 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது அங்கு, இங்கு என்று இல்லாமல் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரவி வருகிறது. இதனால் மக்கள் எந்த பகுதிக்கு சென்றாலும் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகிறார்கள்.நேற்று முன்தினம் வரை குமரியில் கொரோனாவால் 632 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் இறந்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று புதிதாக 51 பேர் கொரோனாவால் பாதிப்புக்குள்ளானார்கள். அவர்களை பற்றிய விவரம் வருமாறு:-

குழித்துறை ஆர்.சி.தெருவைச் சேர்ந்த 36 வயது ஆண், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண், 47 வயது ஆண், 45 வயது பெண், 40 வயது ஆண், 65 வயது பெண், 58 வயது ஆண், 56 வயது பெண், 25 வயது பெண், 3 வயது ஆண் குழந்தை, 19 வயது வாலிபர், 48 வயது பெண், 14 வயது சிறுமி, 15 வயது சிறுமி, மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 50 வயது ஆண், மார்த்தாண்டம் நந்தன்காடு பகுதியைச் சேர்ந்த 39 வயது பெண், குழித்துறை வலியவிளையைச் சேர்ந்த 42 வயது ஆண், இவருடைய 6 வயது மகள், ஆரல்வாய்மொழி மூவேந்தர் நகரைச் சேர்ந்த 36 வயது பெண்,

தட்டான்விளை பகுதியை சேர்ந்த 60 வயது ஆண், தெங்கம்புதூர் குளத்துவிளையைச் சேர்ந்த 35 வயது பெண், 7 வயது சிறுவன், பணிக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 54 வயது ஆண், 52 வயது பெண், நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த 52 வயது ஆண், வடசேரியைச் சேர்ந்த 48 வயது ஆண், 32 வயது பெண், மேலப்புத்தேரி பகுதியைச் சேர்ந்த 40 வயது ஆண், கிருஷ்ணன்கோவிலைச் சேர்ந்த 38 வயது ஆண், 43 வயது ஆண், 42 வயது பெண், 53 வயது ஆண்,

கப்பியறையைச் சேர்ந்த 75 வயது ஆண், 33 வயது பெண், 40 வயது ஆண், பரைக்கோடு பகுதியைச் சேர்ந்த 57 வயது பெண், 32 வயது பெண், 5 வயது சிறுவன், இரண்டரை வயது ஆண் குழந்தை ஆகிய 39 பேர் பாதிக்கப்பட்டுள்னர். இவர்கள் அனைவரையும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். நள்ளிரவில் மேலும் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்த 51 பேருடன் சேர்த்து குமரி மாவட்டத்தில் 683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 34 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே கொரோனாவுக்கு நேற்று மேலும் ஒருவர் பலியானார். அவர் பெருவிளையை சேர்ந்த 61 வயது முதியவர். அவர் ஏற்கனவே மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது. இந்தநிலையில் நள்ளிரவில் அவர் இறந்தார். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply