கன்னியாகுமரி மாவட்டம்: பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இனி செயல்பட தடை! மாவட்ட எஸ்பி உத்தரவு!

தமிழகமெங்கும் காவல்துறையினருடன் பணியாற்றி உதவி செய்திட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பு இயங்கி வந்தது. லட்சக்கணக்கில் மக்கள் கூடும் கோவில் திருவிழாக்கள் அரசு நிகழ்ச்சிகளின் இவர்கள் பங்கேற்று உதவிட வாய்ப்பு அளிக்கப்படும்.

இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இவர்கள் தொடர்ந்து இயங்கிட வேண்டாமென காவல்துறை எஸ் பி ஸ்ரீநாத் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இதுபோல் பல்வேறு மாவட்டங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

Leave a Reply