3வது நாளாக 4,000த்தை கடந்த பாதிப்பு : இன்று ஒரே நாளில் 65 பேர் பலி..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,280 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் கொத்து கொத்தாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 4வது நாளாக இன்றும் பாதிப்பு எண்ணிக்கை 4,000த்தை தாண்டியுள்ளது. இன்று மட்டும் 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரையில் 1,07,001 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்திருப்பதால், மொத்த பலியானோர் எண்ணிக்கை 1,450 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று 2,214 பேர் குணமடைந்திருப்பதால், டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கையும் 60,592 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply