ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து பேசினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராஜ்பவனில் சந்தித்து பேசினார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவ்வப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கிக் கூறி வருகிறார்.

இந்த நிலையில், சாத்தான்குளம் இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்தித்து பேசினார். கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு தளர்வுகள் உள்ளிட்டவை பற்றி ஆளுநருடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

Leave a Reply