மறைந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் உருவப்படத்தை திறந்து வைத்தார் மு.கஸ்டாலின்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கடந்த மாதம் 10 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 62. மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த அவர் 2001 இல் தி.நகரிலும் 2011 மற்றும் 16 இல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றார். 15 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் மாவட்ட செயலாளராக இருந்த இவர் கொரோனா நேரத்திலும் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வந்தார். இவரது மறைவு திமுகவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரைத் தொடர்ந்து அதிமுகவிலும் திமுகவிலும் பல எம்.எல்.ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் உருவப்படத்தை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காணொளி வாயிலாக அன்பழகனின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.

Leave a Reply