நாகர்கோவில் வடசேரி காவல் நிலையம் தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் வடசேரி காவல் நிலையம் தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது. இந்த காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த நான்கு பெண்களுக்கும் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது.

எனவே தொடர்ந்து அவர்கள் பணியாற்றிய வடசேரி காவல் நிலையம் கிருமி நாசினி மருந்து தெளித்து தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குமரிமாவட்டத்தில் கோட்டார் காவல்நிலையம்,ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தை அடுத்து வடசேரி காவல்நிலையமும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. சென்னை கோயம்பேடு மார்கெட்டில் பரவியது போல் தற்போது குமரிமாவட்ட வடசேரி சந்தையில் தொற்று பரவலாக மாறியுள்ளது.எனவே பொதுமக்கள் மத்தியில் பீதி அடைய செய்துள்ளது.

Leave a Reply