நாகர்கோவிலில் 250 க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடி ஏந்தி மனிதசங்கிலி போராட்டம்

நாகர்கோவிலில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களை தனிமைப்படுத்த தனியார் பள்ளியில் ஏற்பாடுகள் நடைப்பெற்று வருவதற்கு பள்ளி அருகே உள்ள குடியிருப்பு மக்கள் கருப்பு கொடி ஏந்தி மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி அருகே உள்ள தனியார் பள்ளியில் வெளிநாடுகள்,வெளியூர்களில் இருந்து குமரிமாவட்டம் வந்தவர்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்தபட்டு அந்த நபர்களை தனிமைப்படுத்த குமரிமாவட்டத்தில் பல்வேறு அரசு கட்டிடங்கள் தனியார் கட்டிடங்கள் என பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள தனியார் பள்ளியில் வெளியே இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்த ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன.இதனால் அந்த பள்ளியை தொட்டு இருக்கும் குடியிருப்பு பகுதி மக்கள் பேராட்டத்தில் இறங்கி உள்ளனர்.தமிழக முதல்வர் வீட்டில் இரு தனித்திரு என்று சொல்லி விட்டு தங்களுக்கு கொரேனாவை பரிசாக வழங்க முயற்சி நடக்கிறதா என கேட்டு கருப்பு கொடி ஏந்தி மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

இதில் பெண்கள் உட்பட 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply