கொரோனா நோயினால் தடைசெய்யப்பட்ட பகுதியிலுள்ள ஏழை குடும்பங்களுக்கு ராபர்ட் புரூஸ் உணவு பொருட்களை வழங்கினார்

கொரோனா நோயினால் பாதிப்புக்குள்ளான தடைசெய்யப்பட்ட பகுதியான வாழ்வச்சகோஸ்டம் பேரூராட்சி இரவிபுதூர்கடை குருவிளைக்காடு காலணி பகுதியிலுள்ள ஏழை குடும்பங்களுக்கு இன்று (4.7.2020) அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான திரு ராபர்ட் புரூஸ் அவர்கள் அரிசி காய்கறி மற்றும் பேரூராட்சி பணியாளர்களுக்கு பிரட் பிஸ்கட் ஆகிய உணவு பொருட்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக் முகமது இளநிலை உதவியாளர் லீலா பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் டென்சிங் துணைத் தலைவர் சசி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மகாதேவன் பிள்ளை வில்லியம் ஜான் செல்வராஜ் விஜய் ராபர்ட் கிளைவ் ஜான்சன் நேசராஜ் ஆல்பன் ஜெயக்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply