கன்னியாகுமரி அஞ்சலகங்களில் தங்கப் பத்திர விற்பனை

இந்திய அரசு தங்கப்பத்திரத் திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. தங்கப் பத்திர விற்பனை ஜூலை 6 ம் தேதி முதல் ஜூலை 10 ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ .4852/-

தனி நபர் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை வாங்கலாம். மேலும் முதலீட்டுத் தொகைக்கு 2.50 சதவீதம் வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் நாளில் அன்றுள்ள விலைக்கு நிகரான பணமும் கிடைக்கும் .

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு, பான் கார்டு, ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல்பக்க நகல் ஆகியவற்றைக் கொண்டு , தங்கப் பத்திரத்தை அனைத்து அஞ்சலகங்களிலும் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.

இத்தகவலை கன்னியாகுமரி முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் திரு கணேஷ் குமார் V.B. தெரிவித்துள்ளார்.

Leave a Reply