நாகர்கோவில் முகக் கவசங்கள் அணியாமல் சுற்றித்திரிந்த நபர்களுக்கு அபராதம்

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் முகக் கவசங்கள் அணியாமலும் இருப்பவர்களுக்கும் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

நாகர்கோவில் வடசேரி மீன் சந்தையில் முகக் கவசங்கள் அணியாமல் மீன்கள் விற்பனை செய்த வியாபாரிகளுக்கும் , பொதுமக்களுக்கும் சுகாதார ஆய்வாளர் திரு.பகவதி பெருமாள் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்தார்கள்.

மேலும் வடசேரி சி.பி.ஹெச் மருத்துவமனை அருகில் முகக் கவசங்கள் அணியாமல் சுற்றித்திரிந்த நபர்களுக்கு சுகாதார ஆய்வாளர் திரு.தியாகராஜன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்தார்கள்.

Leave a Reply