நாகர்கோவில் அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்

நாகர்கோவில் அருகே வடசேரி அருகுவிளையைச் சேர்ந்த சாய்ஜூ மனைவி பேபிசுஜாதா(29). இவர் அதே பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் முகேஷ் என்பவருக்கு ரூபாய் 66 ஆயிரம் கடன் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. பலமுறை கொடுத்த கடனைக் கேட்டும் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.

இறுதியாக கடந்த 30 ம் தேதி தருவதாகக் கூறியதைத் தொடர்ந்து அன்று பேபி சுஜாதா முகேசிடம் பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். எப்படி கேட்கலாம் என கூறி முகேஷ் , அவர் மனைவி ரம்யா மற்றும் மாமியார் மகாலெட்சுமி ஆகியோர் பேபிசுஜாதாவை தாக்கி மானபங்க படுத்தி கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர் . இது சம்பந்தமாக பேபிசுஜாதா கொடுத்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply