தமிழக பா.ஜ.க மாநில துணைத் தலைவராக வி.பி துரைசாமி நியமனம்!

திமுகவில் 1989-1991 மற்றும் 2006-2011 வரை துணை சபாநாயகராக பதவி வகித்தவர் வி.பி.துரைசாமி. மாநிலங்களவை எம்பியாக இருந்த இவர் திமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தார். மாநிலங்களவை சீட் தராததால் கட்சி தலைமையுடன் இருந்த கருத்துவேறுபாடு, தனது சொந்த ஊர்காரரும் தமிழக பாஜக தலைவருமான எல். முருகனுடன் கமலாலயத்தில் சந்திப்பு, திமுக தலைமைக்கு எதிராகப் பேட்டி என பல விவாகரங்களால் வி.பி.துரைசாமியின் பதவி பறிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி, பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தலைமையில் பா.ஜ.கவில் இணைந்தார். இந்த நிலையில், தமிழக பா.ஜ.க மாநில துணைத் தலைவராக வி.பி துரைசாமியை நியமித்து எல்.முருகன் உத்தரவிட்டுள்ளார். மேலும், 3 ஆண்டுகள் ஆனதால் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளை மாற்றம் செய்து அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply