குமரி மாவட்டம் குலசேகரத்தில் ஸ்ரீ மூகாம்பிகா தனியார் மருத்துவகல்லூரியில் மாணவர்கள்,பெற்றோர்கள் போராட்டம்

குமரி மாவட்டம் குலசேகரத்தில் ஸ்ரீ மூகாம்பிகா தனியார் மருத்துவகல்லூரியில் செவிலியர் மாணவர்களை வீட்டிற்க்கு அனுப்பாமல் அடைத்து வைப்பதாக மாணவர்கள்,பெற்றோர்கள் போராட்டம்.

தமிழகத்தில் மிக வேகமாக கொரோனா நோய்தொற்று பரவி வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் இயங்கி வரும் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலிய மாணவர்களை எந்த பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல் விடுப்பும் அளிக்காமல் சுமார் 25,மாணவர்கள் வீதம் அறையில் அடைத்து வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து செவிலிய மாணவி கூறுகையில் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 5பேருக்கு கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் ,இதனால் மாணவர்களாகிய தங்களை வீடுகளுக்கு செல்ல அனுமதி கேட்டும் அனுமதியை மறுத்த நிர்வாகம் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பணி செய்ய வறுப்புறுத்துவதாகவும் தங்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இன்றி சுமார் 25மாணவர்களை வீதம் தனி அறையில் அடைத்து வைப்பதாகவும் தங்கள் கல்வி சான்றிதழை முறையாக தரமாட்டோம் எனவும் மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிப்பதாகவும் மருத்துவ கல்லூரி நிர்வாகம் மிரட்டிவருவதாகவும் கூறினர் .

மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தலையிட்டு தங்களை பெற்றோரிடம் சேர்க்கவும் உதவிட வேண்டுமென்றும் கூறினர்,சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரம் காவல்துறையினர் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Leave a Reply