குமரி மாவட்டம் காமராஜரின் திருவுருவச் சிலை சேதம்..! பனங்காட்டுப்படை இயக்கத்தின் ஆலோசகர் கண்டனம்..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பள்ளிவிளை ஜங்ஷனில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருஉருவ சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடத்தில் காமராஜரின் திருவுருவச் சிலை கடந்த 14 வருடத்திற்கு முன்பு நிறுவப்பட்டது.

இந்த காமராஜரின் சிலையின் மூக்கு பகுதி சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளது.இதனால் இந்த செயலை கண்டித்து பல்வேறு கட்சியினர், நாடார் சங்கத்தினர் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காமராஜரின் சிலை உடைக்கப்பட்டதை அறிந்த பனங்காட்டுப்படை ராக்கெட் ராஜாவின் சகோதரரும் இயக்கத்தின் ஆலோசகருமான பாலசிவனேசன் தனது கண்டனம் தெரிவித்துள்ளார்.

குமரிமாவட்டம் இயற்கை சூழல்களால் மட்டுமல்ல சாதி மதம் பேதமின்றி அனைவரையும் அரவணைத்து கொண்டு வாழும் அற்புத மண். சுற்றுலா வரும் உலக மக்களையும் தன் சொந்த மக்களாக பாவிக்கும் குமரிமாவட்ட மக்கள் இடையே சாதி மோதல்களை தூண்டும் விதமாக தலைவர்களின் சிலையை உடைத்து இருப்பது சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலாகும்.

தலைவர்களின் சிலைகளை சேதப்படுவது கண்டிக்க தக்க செயலாகும். ஆகவே மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அய்யன் காமராஜரின் திருஉருவ சிலையை சேதப்படுத்திய மர்ம நபரை கைது செய்யவேண்டும். காமராஜர் சிலைக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பனங்காட்டுப்படை இயக்கத்தின் ஆலோசகர். பாலசிவனேசன் காமராஜரின் திருஉருவ சிலை சேதப்படுத்தப்பட்டதிற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Leave a Reply