கட்டிமாங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்திகாங் கேயன்விளை கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி

கட்டிமாங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்திகாங் கேயன்விளை கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி பீதியடைய வேண்டாம் என்று ஊராட்சி தலைவர் Adv.திரு. ஜுபிற்றர் உதயம்

கட்டிமாங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்திகாங்கேயன்விளை கிராமத்தில் முத்தையன் மகன் மன்ன பெருமாள் என்பவர் வடசேரி சந்தையில் வெற்றிலை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு வடசேரியில் சில தினங்களுக்கு முன் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதில் மன்னபெருமாள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. கட்டிமாங்கோடு ஊராட்சியில் இருந்து பகுதி முழுவதும் அடைக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் யாரும் வெளியில் செல்ல கூடாது என்றும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் ஊராட்சியில் இருந்து தூய்மை பணியாளர்கள் மூலமாக மேற்படி கிராமம் மமுழுவதும் பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி தெளிக்கப்பட உள்ளது.

ஆகவே ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று ஊராட்சி தலைவர் Adv.திரு. ஜுபிற்றர் உதயம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.மேலும் ஊராட்சி கிராம மக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் யாருக்காவது காய்ச்சல், தும்மல் மற்றும் சளி அறிகுறி இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அல்லது குருந்தன்கோடு B கிராம நிர்வாக அலுவலர் அல்லது குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அல்லது கட்டிமாங்கோடு ஊராட்சிமன்ற தலைவர் Adv.திரு.ஜுபிற்றர் உதயம் அவர்களையோ அல்லது ஊராட்சி வார்டு உறுப்பினர்களையோ தொடர்பு கொண்டு கொரோனா பரிசோதனை செய்து உரிய சிகிட்சை பெற்று பலன்பெற்று கொரோனா இல்லாத ஊராட்சியாக ஆக்குவதற்கு பொதுமக்கள் ஆதரவு தரும்படி கட்டிமாங்கோடு ஊராட்சி தலைவர் Adv.திரு.ஜுபிற்றர் உதயம் அவர்கள் பொதுமக்களை கேட்டுக் கொள்கிறார்கள்.

Leave a Reply