மத்தியப் பிரதேசம்: ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவாளர்கள் உள்ளிட்ட 28 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு!

மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவாளர்கள் உள்ளிட்ட 28 பேர் கேபினெட் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவை பா.ஜ.க-வில் இணைந்தது, அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக அமைச்சரவை விரிவாக்கம் செய்ய முடியாத நிலையிலிருந்தது. கடந்த வாரம் டெல்லி சென்ற மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் பா.ஜ.க தலைவர் நட்டா, பிரதமர் மோடியை சந்தித்து அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

அதன் அடிப்படையில் இன்று மத்தியப் பிரதேச அமைச்சரவை விரிவாக்கம் நடந்தது. ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏ-க்களான இமார்த்தி தேவி (கழிவறை அருகே சமையல் செய்வது தவறு இல்லை என்று கூறியவர்) உள்ளிட்ட 28 பேருக்கு ஆளுநர் ஆனந்தி பென் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பா.ஜ.க-வின் யசோதரா ராஜே சந்தியாவும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Leave a Reply