பத்மநாபபுரம் தி.மு.க. எம்.எல்.ஏ. நூதன போராட்டம்

போலீசாரின் செயல்பாடுகள் குறித்து பலமுறை மனுக்கள் கொடுத்தும், நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பத்மநாபபுரம் தி.மு.க. எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் கருங்கல் சந்திப்பில் ஒரு பசு மாட்டிடம் புகார் மனுவை கொடுப்பது போல் நூதன போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தில் கிள்ளியூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராஜன், கீழ்குளம் பேரூர் செயலாளர் கோபால், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ததேயு பிரேம் குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜேஷ் குமார், வக்கீல் அணி துணை அமைப்பாளர் ஜெபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply