நாகர்கோவில் தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் திடீர் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்தும் ராணுவத்திலிருந்தும் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அவர்களை கொரோனா டெஸ்டு என்ற பெயரில் நாகர்கோவில் தனியார் கல்லூரியில் தங்க வைத்துள்ளனர். அங்கு முகாமில் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை எனவும் கேரளா அரசை ஒப்பிடும் போது தமிழக அரசு எவ்வித ஏற்பாடுகளும் செய்யவில்லை எனவும் கூறினர்.

இதனால் அங்கு தங்கியுள்ளவர்கள் வாசலின் முன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு மாவட்ட நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு வைத்தனர்.

Leave a Reply