நாகர்கோவிலில் பரபரப்பு மணப்பெண்ணின் தாய்க்கு கொரோனா தொற்று திருமணத்திற்கு வந்த மக்கள் பீதி…!

நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் நடைபெற்ற திருமண வீட்டில் மணப்பெண்ணின் தாய்க்கு கொரோனா தொற்று.

பெண் வீட்டார் சிர்காழிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகர்கோவில் பகுதியில் திருமணத்திற்கு வரும் போது ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் பரிசோதனைக்கு உட்படுத்த பட்டனர். பின்பு சோதனை முடிவு வரத நிலையில் இன்று திருமண நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் நடைபெற்ற நாளில் பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் மணப்பெண்ணின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரிய வந்துள்ளது.

இதனால் திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தி சென்றவர்கள் கொரோனா தொற்று பரவல் பீதியில் உள்ளனர். திருமண வீட்டிற்கு சுகாதார ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தனர்.

Leave a Reply