தோவாளை துணை அஞ்சலகத்தின் செயல்பாட்டினை புதிய கட்டிடத்தில் தளவாய் சுந்தரம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள், தோவாளை மின்வாரிய கட்டிடத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள, தோவாளை துணை அஞ்சலகத்தின் செயல்பாட்டினை, குத்துவிளக்கேற்றி இன்று (02.07.2020) துவக்கி வைத்தார்.

தோவாளை துணை அஞ்சல் நிலையத்தின் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக, பதிவு தபால், விரைவு தபால், பார்சல், பண பரிவர்த்தனை, முதியோர் ஓய்வூதியம், சேமிப்பு வங்கி, ஆயுள் காப்பீடு போன்ற பல்வேறு பணிகளை பொதுமக்களுக்காக செய்து வருகிறார்கள். இந்த துணை அஞ்சலத்தின் மூலம் 30 கிராமங்களிலுள்ள பொதுமக்கள் பயனடைகிறார்கள். மேலும், இதன்கீழ் இராமபுரம்,
மாதவலாயம், வெள்ளமடம் ஆகிய பகுதிகளில் கிளை அலுவலகங்களும் செயல்பட்டு வருகிறது.

மேலும், இந்த தபால் நிலையத்தின் மூலம் இதுவரை 7,000 சேமிப்பு கணக்குகளும், 3,000 செல்வமகள் சேமிப்பு கணக்குகளும், 10,000 தொடர்-வைப்பு கணக்குகளும 2,500 அஞ்சல் ஆயுள் காப்பீடுகளும், 2,000 பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா /பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா காப்பீடுகளும், 500 அடல் ஓய்வூதியம் திட்டம்,
150 முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

நடைபெற்ற நிகழ்ச்சியில், திரு.எச்.வசந்தகுமார், எம்.பி., மாவட்ட ஆவின் பெருந்தலைவர் திரு.எஸ்.ஏ.அசோகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியப் பெருந்தலைவர் திரு.எஸ்.கிருஷ்ணகுமார், முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் திரு.வி.பி.கணேஷ்குமார், இ.அ.ப., ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் திருமதி.இ.சாந்தினி பகவதியப்பன் (தோவாளை), திரு.எஸ் அழகேசன் (அகஸ்தீஸ்வரம்), மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.மா.பரமேஸ்வரன், தோவாளை ஊராட்சி மன்றத்தலைவர் திரு.அ.நெடுஞ்செழியன், தோவாளை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திரு.என்.எம்.தாணு, உதவி கண்காணிப்பாளர் திரு.ஜி.செந்தில்குமார், அஞ்சல் ஆய்வாளர் திரு.பி.கணபதி சுப்பிரமணியன், தோவாளை துணை அஞ்சல் அதிகாரி திருமதி.ஜி.ராஜம் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply