திருவட்டார் அருகே நல்லடக்கம் செய்ய தடை..! ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ சுமூகமான தீர்வு..!

திருவட்டார் அருகே புலிநரங்கி கொக்கோட்டுமுக்கு பகுதியில் இன்று விபத்தில் இறந்த ஜான்சன் என்ற நபரை நல்லடக்கம் செய்ய உறவினர்கள் தயார்நிலையில் இருந்தனர்.

அப்போது பட்டா நிலத்தில் நல்லடக்கம் செய்ய விடாமல் இந்து முன்னணியினர் தடுத்தனர். இந்த செய்தி உறவினர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இத்தகவல் அறிந்த குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் சட்ட மன்ற உறுப்பினரும் ஆன வழக்கறிஞர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் தலைமயில் தக்கலை டிஸ்பியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

பின்பு சுமூகமான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் வட்டார பேரூராட்சி தலைவர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply