கடைகளை திறக்க கட்டுப்பாடு: மாலையில் வெறிச்சோடிய குமரி விதிமீறல் 8,481 வழக்குப்பதிவு

கொரோனாவை இந்தியா முழுவதும் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 6-வது முறையாக நேற்று தொடங்கி 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் ஓட்டல்கள் மற்றும் மருந்து கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க கலெக்டர் பிரசாந்த் வடநேரே கட்டுப்பாடு விதித்து இருந்தார். அதன்படி நேற்று குமரி மாவட்டத்தில் கடைகள் காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன. மாலை 5 மணிக்கு கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் நாகர்கோவில் கோட்டார் பகுதி உள்பட குமரி மாவட்டம் முழுவதும் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

ஊரடங்கு தொடர்பாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘முகக்கவசம் அணியாமல் நேற்று பொது இடங்களில் சுற்றித்திரிந்த 242 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.24 ஆயிரத்து 200 வசூலானது. மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த 99 நாட்களில் 8 ஆயிரத்து 481 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 ஆயிரத்து 318 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன‘ என குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Reply