அதிமுக உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுருவுக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட3,882 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 94, 049 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 63 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.26 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,264 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மா.செ.வும் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ.வுமான குமரகுருவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான இவர் உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்தை எதிர்த்து நின்று வெற்றி பெற்றவர் ஆவார்.

முன்னதாக சட்டமன்ற உறுப்பினர்களான செஞ்சி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. மஸ்தான், செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு, ஸ்ரீபெரும்புத்தூர் அதிமுக எம்எல்ஏ பழனி உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply