நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரகத்தில் அகில இந்திய கிறிஸ்தவ சேனை அமைப்பினர் மனு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோரை அடித்து கொலை செய்த காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கேட்டு அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சேனை அமைப்பினர் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் செல்போன் கடை நடத்தி வந்தவர்கள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் இவர்களை விசாரணைக்காக சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று கொடூரமான முறையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். எந்த குறையும் இல்லாத வியாபாரிகள் மீது காவலர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இரண்டு வியாபாரிகளும் மரணமடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட காவலர் மீது வழக்கு செய்யப்படவில்லை. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணையை சிபிசிஐடி வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.

ஆனால் இன்றளவும் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை வழக்கு பதிவு செய்ய கால தாமதமாகும் பட்சத்தில் கொலையாளிகள் அரசு அதிகாரிகள் ஆகையால் வழக்கிற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் தடயங்களையும் அவர்கள் இல்லாமல் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது. மீண்டும் கொலை வழக்குப் பதிவு செய்ய காலதாமதம் ஆகிறது பார்க்கும்போது அதிகாரிகள் ஆவணங்களை அழிக்க முயற்சிக்கிறார்கள் என்று பொதுமக்களுக்கு தோன்றுகிறது.

எனவே மக்களின் உணர்வுகளை மதித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவும் பொதுமக்கள் நீதித்துறை மீது வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாமல் இருக்கவும்,கொலை வழக்கு சம்பந்தப்பட்ட மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த சாத்தான்குளம் காவல் நிலைய காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.

என்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரகத்தில் அகில இந்திய கிறிஸ்தவ சேனை அமைப்பினர் மனு அளித்தனர்

Leave a Reply