நாகர்கோவில் செயல்படாத ஏடிஎம் மையத்திற்கு விசுவ இந்து அமைப்பினர் மலர்வளையம் வைத்து இறுதி சடங்கு

நாகர்கோவில் அருகே விவசாயிகள் நிறைந்த தாழாக்குடி ஐ.ஓ.பி. வங்கியில் ஒரு வருடமாக செயல்படாத ஏடிஎம் மையத்திற்கு விசுவ இந்து அமைப்பினர் மலர்வளையம் வைத்து இறுதி சடங்கு நடத்தினர்.

நாகர்கோவில் அருகே தாழாக்குடி பேரூராட்சி உள்ளது இங்குள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையை யொட்டி ஏடிஎம் மையம் செயல்பட்டு வந்தது. இந்த பகுதியில் முழுக்க முழுக்க விவசாயிகள் மற்றும் சமையல் கலைஞர்கள் நிறைந்த பகுதி என்பதால் பெருமளவு மக்கள் அந்த ஏடிஎம் இயந்திரத்தை உபயோகப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக இந்த மையம் செயல்படாததால் விஷ்வ ஹிந்து அமைப்பினர் கிளையின் முன்பக்கம் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததோடு மீண்டும் ஏடிஎம் மையத்தை செயல்பட நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply