தக்கலையில் தமுமுக மாவட்ட மருத்துவ அணி சார்பாக ஆயிரம் பயனாளிகளுக்கு கபசுர குடிநீர்

குமரி மாவட்டம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக மருத்துவ சேவை அணி சார்பாக தக்கலையில் ஆயிரம் பயனாளிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தக்கலை காவல் நிலையம் தக்கலை உதவி செயற் பொறியாளர் அலுவலக ஊழியர்கள், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு தமுமுக மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஷபீக்ரஹ்மான் தலைமை வகித்தார்.தக்கலை காவல்துறை ஆய்வாளர் அருள்பிரகாஷ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சிதம்பரம்தாணு கபசுரக் குடிநீர் வழங்கினர் . இதில் காவல்துறையினர் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர். கபசுர குடிநீர் சாலையோர பாதசாரிகள் ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ அணி பொருளாளர் சபீக்,தக்கலை நகர தமுமுக செயலாளர் மலுக்கு முஹம்மது,தக்கலை செய்யது அலி,அன்ஷாத், அசார் ஆகியோர் கலந்துகொண்டனர். தமுமுக சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply