குமரியில் மேலும் 2 டாக்டர்கள் உள்பட 24 பேருக்கு தொற்று

குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருகிறது. இதில் முன் கள பணியாளர்களான டாக்டரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அவர்களையும் தற்போது குறி வைத்து தாக்குகிறது.

இந்தநிலையில் நேற்று மேலும் 2 டாக்டர்கள் உள்பட 24 பேருக்கு தொற்று ஏற்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

நாகர்கோவில் ஒழுகினசேரி ஓட்டுப்புரவிளையைச் சேர்ந்த 41 வயது ஆண், நங்கூரான்பிலா விளை பகுதியை சேர்ந்த 39 வயது ஆண், பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர், மாவிளை பகுதியை சேர்ந்த 41 வயது ஆண், தேவிகோடு குழிவிளையைச் சேர்ந்த 25 வயது பெண், பளுகல் வாத்தியார்கோணம் பகுதியைச் சேர்ந்த 62 வயது முதியவர், குலசேகரம் பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர், குளச்சல் வாணியக்குடியைச் சேர்ந்த 28 வயது வாலிபர், உண்ணாமலைக்கடை அம்மாவிளை பகுதியை சேர்ந்த 41 வயது ஆண், திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த பெண்,

திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த 45 வயது ஆண், தக்கலை ராமன்பரம்பு பகுதியைச் சேர்ந்த 50 வயது ஆண், நாகர்கோவில் நாகவல்லார் தெருவைச் சேர்ந்த 18 வயது பெண், 30 வயது பெண், 15 வயது சிறுமி, ஆசாரிபள்ளம் சலேத்மாதா தெருவைச் சேர்ந்த 57 வயது ஆண், நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் குடியிருப்பைச் சேர்ந்த 30 வயது பெண் டாக்டர், 33 வயது ஆண் டாக்டர், புதுக்கடை பகுதியை சேர்ந்த 27 வயது பெண், திக்குறிச்சி நெடுவிளை பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி, 35 வயது பெண், சின்னத்துறையைச் சேர்ந்த 52 வயது ஆண், இவருடைய 17 வயது மகள், அருமனை பகுதியை சேர்ந்த 53 வயது பெண் என 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் குமரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 467 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply