நாகர்கோவில் மனித பாதுகாப்புக் கழகம் மற்றும் மரியா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி இணைந்து இலவச மருத்துவ முகாம்

மனித பாதுகாப்புக் கழகம் மற்றும் மரியா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள் குழுமம் இணைந்து, நாகர்கோவில் வடசேரிப் பேருந்து நிலையத்தில் வைத்து கொரோனா நோய் தடுப்பு இலவச மருத்துவ முகாம் நடத்தினர். முகாமிற்கு கழகக் குமரி மாவட்ட துணைத் தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். மருத்துவ முகாமை கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் உஷா தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கழக நிறுவன தலைவர் டாக்டர் ஜெய்மோகன், ஆற்றூர் மரியா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள் குழும நிறுவனர் டாக்டர் றசல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மருத்துவ முகாமில் பயன் பெற்ற பொதுமக்களுக்கு, கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முகக் கவசம் அணிவது,கைகளை அடிக்கடிக் கழுவுவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு பற்றி அறிவுறுத்தப்பட்டது.கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க, மத்திய அரசின் “ஆயுஷ்” அமைச்சகத்தால் பரிந்துரைச் செய்யப்பட்ட “ஆர்செனிக்கம் ஆல்பம் 30” என்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மாத்திரைகள் மருத்துவரின் ஆலோசனைப்படி வழங்கப்பட்டது.

மருத்துவ முகாமில், மரியா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள் குழுமப் பணியாளர்கள், கழக குமரி மாவட்டச் செயலாளர் ஜாண்வின்சென்ட்ராஜ், இணைச்செயலாளர் ராமசுவாமிபிள்ளை, கழக ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், ஆலோசகர் சகாய அருள்ராஜ், மகளிரணி மாவட்டச் செயலாளர் சகாய அகிலா, துணைச் செயலாளர் ஜெயபாரதி, இளைஞரணி செயலாளர் டாக்டர் .அக்கரை.வி.மணிகண்டன், துணைச் செயலாளர் சிவபாலன் மற்றும் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply