நாகர்கோவிலில் காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய்க்கு நிகராக விலை குறைக்க வலியுறுத்தி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் மகளிர் அணி மாவட்டத்தலைவி அருள்சபிதா ரெக்ஸ்லின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் திரு. வசந்தகுமார் எம்பி, மாவட்ட தலைவர் திரு. ஆர். ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி தொகுதித்தலைவி ஹெலன் சிறில், குளச்சல்த்தொகுதி தலைவி ஜாண்சி ஆல்பர்ட், குருந்தன்கோடு வட்டாரத் தலைவி நீது மோள், பெலிக்ஸ் பிரபு, கென்னடி, வட்டாரத்தலைவர் கால பெருமாள் அமல விண்ணரசி, ஸ்டெனி, விஜயகுமாரி,மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply