டிக்டாக், ஹலோ உள்பட 59 செயலிகளுக்கு தடை: இந்தியா அதிரடி உத்தரவு

டிக் டாக், ஹலோ ஆப் உள்பட சீன நிறுவனங்களின் 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்திய சீன எல்லையில் சமீபத்தில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து சீன பொருட்களை தடைசெய்ய வேண்டுமென்றும் சீன செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சீன பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்றும் நாடு முழுவதும் பெரும் எழுச்சி எழுந்தது.

இந்த நிலையில் சீன செயலிகள் சிலவற்றுக்கு தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வந்ததாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி டிக் டாக்,  ஷேர் இட், யூசி பிரெளசர், ஹலோ ஆப், நியூஸ் டாக், உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply