குமரி மாவட்ட இசை மெல்லிசை கலைஞர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கன்னியாகுமரி மாவட்டம் கோவில் திருவிழா திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு இன்னிசைக் கச்சேரிகள் நடத்தி வரும் மேடையில் இசைக்கலைஞர்கள் இதையே தொழிலாகக் கொண்டு குடும்பம் நடத்தி வருகின்றனர் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மேடைக் கச்சேரியை நம்பியுள்ளனர் ஆடியோ அமைப்பவரும் அடங்குவார். இசைக் கச்சேரிகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் வேறு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்த முடியாது எமது மாவட்டத்தில் சுமார் 4 மாதங்களுக்கு மேல் எந்த நிகழ்ச்சியும் இல்லாத காரணத்தினால் எல்லோரும் குடும்பங்கள் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறது.

இசை நிகழ்ச்சிகளைச் சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து அரசு விதிகளுக்கு உட்பட்டு ஆறு நபர்கள் மட்டும் கொண்டு இசை நிகழ்ச்சியை நடத்தவும் மேலும் கொரோனா அரசு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு மேடை இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் கிராம இசை கலைஞர்களுக்கு அரசு உதவி உதவியது போல எமது மேடை இசை மெல்லிசை கலைஞர்களுக்கு நிவாரண நிதி மற்றும் பொருளுதவி தந்து நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்கி எமது நீதி இசை கலைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தக் கேட்டு கன்னியாகுமரி மாவட்ட இசை மெல்லிசை கலைஞர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

இதில் ஒருங்கிணைப்பாளர் ரோசாரியோ ஜவாகர் மணவாளன் சுடலையாண்டி மற்றும் மேடை இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply