குமரி மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கன்னியாகுமரி மாவட்டம் போக்குவரத்து அலுவலகத்தில் போலியான பெயர் மாற்றம் மற்றும் நம்பர் மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக சிபிசிஐடி விசாரணைக்கு உட்பட்ட இருக்கின்ற காசி என்பவரின் வாகனத்தை எடுத்துச் சென்று அவருடைய பெயருக்கு பெயர் மாற்றம் செய்து இருக்கிறார்கள்.

அதற்கு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களும் சில இடைத்தரகர்களும் உதவி செய்திருக்கின்றனர். இது போன்று வாகன கடத்தியதில் உருக்குலைந்த வண்டிகள் நம்பர்களை வேறு வாகனத்துக்கு மாற்றம் செய்து போட்டு சட்டத்துக்குப் புறம்பான வேலைகளை செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வாகனங்களை பயன்படுத்துவது தொடர்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து தண்டிக்கப்பட வேண்டும்.

என இதன் காரணமாக விபத்துக்கள் ஏற்படும்போது உண்மை குற்றவாளியை தப்பிக்கவும் நிரபராதிகள் தண்டிக்கப்படுவதும் தொடர்கிறது மாவட்ட ஆட்சியர் விசாரித்து உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிக்க இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர் இதில் வட்டார செயலாளர் மோகன் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது உசேன், மாவட்ட குழு உறுப்பினர் அந்தோனி, நாகர்கோவில் வட்டார குழு உறுப்பினர் நாகராஜன், ராகநாயகம், மனோராகஸ்டஸ், ஆனந்த மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply