குமரி கிழக்கு மாவட்ட திமுக…சாத்தான்குளத்தில் தந்தை,மகன் சாவுக்கு காரணமான அனைவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும்..

குமரி கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நேற்றுமாலை நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் ஜோசப்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜன் எம்எல்ஏ, பொருளாளர் கேட்சன், மாவட்ட துணை செயலாளர் அர்சுனன், மாநகர் செயலாளர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், சாத்தன்குளம் பகுதியை சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் அவர்கள் மரணமடைந்தனர். அவர்களின் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து கொலைக்கு காரணமான காவல்துறையினர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அனைவரையும் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

வெளிநாடுகளில் பணியாற்றி வரும் தமிழர்கள் மற்றும் சுற்றுலா சென்ற தமிழர்கள் பலர் சிக்கி தவித்து வருகின்றனர்.அவர்களை உடனடியாக தமிழகம் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் முடங்கி போய் உள்ளது. இந்நிலையில் தினமும் உயரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை மிகவும் பாதித்து உள்ளது. பெட்ரோலிய பொருட்களின் மீது தொடர்ந்து கலால்வரியை உயர்த்திவரும் மத்திய அரசையும், அதற்கு துணை போகும் மா நில அரசையும் இக்கூட்டம் வன்மையாககண்டிக்கிறது.

பேரிடர் காலத்தில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் கட்டாய தவணை தொகை வசூல் நடை பெறாமல் இருக்க மத்திய, மாநில நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் கொரோனாவைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்ததவறிய மாநில அரசையும்,மாவட்ட நிர்வாகத்தையும் வன்மையாககண்டிக்கிறது. கொரோனாதடைக்காலத்தில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்துக் கூறியதை போன்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் தோறும் ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும்.

கொரோனா வைரஸ் கேரள அரசு அறிவித்துள்ளது போல், தமிழகத்திலும் மின்கட்டணத்தில் 50சதவீதம் சலுகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஆஸ்டின்எம்எல்ஏ, மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ஹெலன்டேவிட்சன், ஒன்றிய செயலாளர்கள் தாமரைபாரதி, மதியழகன், சற்குரு கண்ணன்,நெடுஞ் செழியன், எப்.எம்.ராஜரெத்தினம், லிவிங்ஸ்டன், குட்டிராஜன், ரமேஷ்பாபு, செயற்குழு உறுப்பினர் சாய்ராம், பொதுக்குழு உறுப்பினர்கள் ஷேக்தாவூத், அழகம்மாள்தாஸ், பெஞ்சமின், குளச்சல் நகர செயலாளர் ரகீம், மற்றும் எம்.ஜே.ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply