காசியின் தந்தை சி.பி.சிஜ.டி போலீசாரால் கைது

பள்ளி மாணவிகள் முதல் குடும்ப பெண்கள் வரை நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த நாகர்கோவில் காசி, சென்னையில் உள்ள பெண் டாக்டர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் நாகர்கோவில் காசியின் லேப்டாப்பில் இருந்து பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. இதனையடுத்து காசியின் நண்பர் டேசன், தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாகர்கோவில் காசியின் நெருங்கிய நண்பர் ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டதாகவும் அவரை பிடித்து இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் நாகர்கோவில் காசியின் தந்தை தங்கபாண்டியன் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். மகனின் பாலியல் சம்பவங்கள் தொடர்பான தடயங்களை அழித்ததாக அவரது தந்தை மீது புகார் எழுந்த நிலையில் அதனடிப்படையில் காசியின் தந்தை தங்கபாண்டியன் கைது செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே நாகர்கோவில் காசி வழக்கில் காசியில் நண்பர்கள் டேசன், தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது நாகர்கோவில் காசியின் தந்தையும் தடயங்களை அழித்ததற்காக கைது செய்யப்பட்டதால் இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply