மாற்றுக் கட்சியை சேர்ந்த சுமார் 50 பேர் ஆஸ்டின் எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்

கரும் பாட்டூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த பா.ஜ.க.,அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர். அதன்படி சாமிதோப்பு கிழக்குசாலை விநாயகர் ஜங்ஷன் அரசமூடு பகுதியில் இணைப்பு விழா நடந்தது அகஸ் தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வக்கீல் தாமரை பாரதி தலைமை வகித்தார்.

முன்னாள் மாநில தொண்டர் அணி துணை செயலாளர் வக்கீல் பால. ஜனாதிபதி, பொறியாளர் அணி அமைப்பாளர் பார்த்தசாரதி, பேரூர் திமுக செயலாளர் பூவியூர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கரும்பாட்டூர் ஊராட்சி முன்னாள் தி.மு.க. செயலாளர் மணியின் ஏற்பாட்டின்படி மாற்றுக் கட்சியை சேர்ந்த சுமார் 50 பேர் ஆஸ்டின் எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் சோட்டப்பணிக்கன் தேரிவிளை ஊர் தலைவர் சிவமான், ஒன்றிய பிரதிநிதி ஜாண் கிறிஸ் டோபர்,அரசு ஒப்பந்தக்காரர் ஸ்டூவர்ட் ஐசக் சாம், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் நாஞ்சில் ஜோனி மோசஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply