பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி மாவட்டத்தில் காங்கிரசார் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி மாவட்டத்தில் காங்கிரசார் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்செய்தனர். இதில் எம் எல் ஏக்கள் உள்படஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு

நாகர்கோவிலில் இன்று காலை குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முருசன், அனுஷா பிரைட் மாவட்ட துணை தலைவர் மகேஷ்லாசர், வட்டார தலைவர்கள் அசோக்ராஜ்,செல்வராஜ், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

குழித்துறை தபால் நிலையம் முன்பு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விஜயதரணி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் திவாகர், சேவாதளம் மாவட்ட தலைவர் ஜோசப்தயாசிங், மகிளா காங். மாவட்டதலைவர் ஷர்மிளா ஏஞ்சல், நிர்வாகிகள் டாக்டர் தம்பிவிஜயகுமார், செல்வகுமார், நகர தலைவர் அருள்ராஜ், துணை தலைவர் பால் மணி மற்றும் வட்டார தலைவர்கள், நகர தலைவர்கள் பேரூர் தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

குளச்சல் அண்ணா சிலை சந்திப்பில் எம்.எல்.ஏ. பிரின்ஸ் தலைமையில் காங்கிரசார் காரை கயிறு கட்டி இழுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் யூசுப்கான்,மாவட்ட செயலாளர் தர்மராஜ், துணைத்தலைவர் முனாப், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் எனல்ராஜ், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் சபீன், வட்டார தலைவர் டென்னீஸ், நகர தலைவர் சந்திரசேகர், துணைத்தலைவர் லாலின், கல்லுக்கூட்டம் பேரூர் தலைவர் மனோகரசிங், தென்மண்டல சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் ஜெபசீலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திங்கள் சந்தை பிலாக்கோடு சந்திப்பில் குருந்தன் கோடு கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் ஜெரால்டு கென்னடி , தலைமை வகித்தார். பேரூர் காங்கிரஸ் தலைவர்கள் பீட்டர்தாஸ், மனோகரசிங், முன்னாள் தலைவர் தேவ தாஸ் முன்னிலை வகித்தனர். பிரின்ஸ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். வட்டார, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply