குமரி மாவட்டத்தில் தனிமைபடுத்தும் முகாம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

குமரி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது கூடுதலாக 1500படுக்கை வசதிகளுடன் கொரோனா வார்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பள்ளி, கல்லூரிகளில் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஆசாரிப்பள்ளத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியிலும் சுமார் 150 பேர் முதல் 200 பேர் தங்க கூடியவகையில் வார்டு அமைக்கப்பட உள்ளது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதிகளவில் குடியிருப்புகள் அமைந்துள்ள கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து கொரோனா வார்டு அமைக்க கூடாது என கூறி உள்ள அந்த பகுதி மக்கள், இதை கண்டித்து இன்று காலை பள்ளி வளாகத்தில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கபிலன் என்பவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையடுத்து போலீசார் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

Leave a Reply