வாட்ஸ் அப்பில் வைரலான வீடியோ குமரியில் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் இடமாற்றம்

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள பார்த்திபபுரம் குளத்தின்கரையில் இரண்டு போலீசார், ஒரு டெம்போ டிரைவரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற காட்சிகள் வாட்ஸ் அப்மற்றும் சமூகவலை தளங்களில் வைரலாக பரவியது. 50 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், ஒரு டெம்போ டிரைவர் வாகனத்தை ஓட்டும் காட்சியில் இருந்து தொடங்குகிறது.

டிரைவரின் கையில் பண மும், சில ஆவணமும் உள்ளது. சிறிது நேரத்தில் ஒரு குளத்தின் கரையில் பைக்கை நிறுத்தி விட்டு அமர்ந்து இருக்கும் போலீஸ்காரர் ஒருவரிடம் பணத்தை கொடுத்து விட்டு செல்கிறார். அந்த பணத்தை சீருடையில் உள்ள அந்த போலீஸ் காரர் வாங்கி பேண்ட் பாக்கெட்டில் வைப்பது போன்ற அந்த வீடியோ முடிவடைகிறது.

இந்த வீடியோ தொடர்பாக குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வேஸ் பி. சாஸ்திரி விசாரணை நடத்த, எஸ்.பி. ஸ்ரீநாத் உத்தரவிட்டார். அதன்படி ஏ.எஸ்.பி. விசாரணை அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் இடமாற்றம் செய்து,
எஸ்.பி. ஸ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார். விரைவில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

Leave a Reply