சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்..! சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று முதலமைச்சர் அறிவிப்பு

கோவில்பட்டி கிளைச்சிறையில் இருவர் உயிரிழந்த விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு நீதிமன்ற அனுமதியுடன் மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சேலம் தலைவாசலில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி பணிகளை அவர் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது:

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தெரிவித்து, நீதிமன்ற அனுமதி பெற்ற பிறகு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படும்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் சேலத்தில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. கால்நடை பூங்காவிற்கு ஆயிரத்து 22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை பூங்கா மூலம் நாட்டின் மாடுகள், கோழிகள், நாய்கள் உள்ளிட்ட உயிரினங்கள் காக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply