குமரி மாவட்டத்தில் அனைத்து நெசவாளர்களுக்கு நிவாரணத்தொகை சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் ஏறத்தாழ 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாகவும், தனியார் கைத்தறி கூடங்களிலும் நெசவுத்தொழில் செய்து வருகிறார்கள். தற்போது மத்திய, மாநில அரசுகள் அறிவித்த கொரோனா ஊரடங்கின் காரணமாக தொழில் பாதிப்பு அடைந்து முழு வாழ்வாதாரமும் இழந்து, வீட்டினுள் முடங்கிப்போய் உள்ளனர். குமரி மாவட்டத்தில் தற்போது நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் பெறுவதற்கு தகுதியான நெசவாளர்கள் என சுமார் 650 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 25 ஆயிரம் நெசவாளர்கள் வாழ்கிற குமரி மாவட்டத்தில் பயனாளிகள் 650 பேர் மட்டும்தான் என்பது சரியானதாக தெரியவில்லை. நிவாரண நிதியை இலவச மின்சாரம் பெறும் பயனாளிக்கு மட்டும்தான் என்ற நிபந்தனையை மாற்றி உண்மையான கைத்தறி நெசவாளர்கள் மற்றும் துணைத்தொழில் செய்து வரும் நெசவாளர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டுமென்று குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

Leave a Reply