குமரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 400-ஐ நெருங்கியது

குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது. நேற்று முன்தினம் வரையில் குமரி மாவட்டத்தில் 375 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 199 பேர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்கள் அனைவரும் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பினர்.

இந்தநிலையில் நேற்று 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களைப் பற்றிய விவரம் வருமாறு:-

நாகர்கோவில் வடசேரி அறுகுவிளையைச் சேர்ந்த 40 வயது பெண், இவருடைய 17 வயது மகன், உதயமார்த்தாண்டம் விருந்தோம்பிவிளையைச் சேர்ந்த 20 வயது ஆண், தக்கலை புலியூர்குறிச்சி அருகில் தென்கரைதோப்பு பகுதியைச் சேர்ந்த 37 வயது பெண், குழித்துறை ஆர்.சி. தெருவைச் சேர்ந்த 30 வயது பெண், இவருடைய 5 வயது மகள், 1¾ வயது மகன், செருவல்லார் புலியூர்சாலை பகுதியைச் சேர்ந்த 2½ வயது பெண் குழந்தை, தூத்தூர் பகுதியைச் சேர்ந்த 51 வயது ஆண், 28 வயது பெண், 32 வயது ஆண், 36 வயது ஆண், 37 வயது பெண், 28 வயது பெண், 48 வயது ஆண், 40 வயது ஆண், மாஞ்சாத்தோப்பு 71 வயது பெண், சின்னத்துறையைச் சேர்ந்த 72 வயது பெண், கொல்லங்குழி பிலாவிளை 4½ வயது ஆண் குழந்தை, வடக்குத்தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த 46 வயது பெண், சீதப்பால் பகுதியைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை, சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த பெண் ஆகிய 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 397 ஆக உயர்ந்துள்ளது. ஆஸ்பத்திரியில் 221 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 9 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 212 ஆக குறைந்துள்ளது.

Leave a Reply