ஆன்லைனில் ஆர்டர் சிக்கன் விற்பனை… சென்னையில் சிக்கிய டிராவல்ஸ் அதிபர்

ஊரடங்கால் வருமானத்தை இழந்த டிராவல்ஸ் அதிபர் ஒருவர், சோமோட்டோ நிறுவனத்தின் சட்டையை போட்டி சிக்கனை விற்பனை செய்துள்ளார். அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 68 பேர் பலியாகியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்துவிட்டது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் நிலையில் சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு போடப்பட்ட நிலையில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்க அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இறச்சி கடைகள் திறப்பதற்கு அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆன்லைன் உணவு டெலிவரி பாய் போல சோமோட்டோ நிறுவன ஆடை அணிந்துக்கொண்டு கோழி கறியை கண்ணகிநகர் பகுதியில் விற்பனை செய்து வருதாக கண்ணகிநகர் காவல் ஆய்வாளர் வீரக்குமாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் ஆன்லைன் உணவு டெலிவரி செய்வதுபோல கோழி கறியை திருட்டுதனமாக விற்பனை செய்து வரும்போது கையும் கவுமாக பிடித்த காவல்துறையினர் சிக்கன் கறியை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டப்போது,“கைது செய்யப்பட்டுள்ள சரவணன் 10ம் வகுப்பு வரை நடித்துள்ளாார். துரைப்பாக்கத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவந்த சரவணன், சமூக ஆர்வலர் எனக்கூறிக் கொண்டு சமூகவலைதளங்களில் வீடியோக்களை பதிவு செய்துவந்துள்ளார். கொரோனா ஊரடங்கால் டிராவல்ஸ் நிறுவனத்தில் வருமானம் இல்லாததால் ஆன்லைன் உணவு டெலிவரி வேலை செய்ய தொடங்கியுள்ளார். ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும்போது அசைவப் பிரியர்களிடம் சிக்கனுக்கான ஆர்டரை எடுத்துள்ளார்.

சரவணனின் செல்போனுக்கு சிக்கனுக்காக ஆர்டர் வந்ததும் தனக்கு தெரிந்த கோழிக்கடை வியாபாரி ரகுநாதனுக்கு அவர் தகவல் கொடுப்பார். உடனே அரை கிலோ எடையுள்ள பேக் சிக்கனை ரகுநாதன், சரவணனிடம் கொடுத்துவிடுவார். அதை உணவு டெலிவரி செய்வது போல சரவணனும் விற்பனை செய்துவந்துள்ளார். ஊரடங்கு நேரம் என்பதால் வழக்கமான விலையைவிட கூடுதலாகவும் சிக்கனை விற்பனை செய்துவந்துள்ளார். ஊரடங்கு காலகட்டத்தில் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்வதைப் போல சிக்கனை விற்பனை செய்து வந்த சரவணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். சரவணன் கொடுத்த தகவலின்படி வியாபாரி ரகுநாதன் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.

Leave a Reply