தந்தை- மகனை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்டம் பளுகல் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் குற்றம் புரிந்த சப்-இன்ஸ்பெக்டர் மீதும், சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வியாபாரிகளான தந்தை, மகன்இருவரையும் கொடூரமாக தாக்கி இறப்பதற்கு காரணமான போலீசார் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அகமது உசேன், முருகேசன், உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் மாநகரக்குழு சார்பில் வடசேரி அண்ணாசிலை சந்திப்பு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகரக்குழு உறுப்பினர் அஜிஸ் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் அந்தோணி கண்டன உரையாற்றினார். நிர்வாகிகள் பரமசிவன், அருணாசலம், மீனாட்சிசுந்தரம். மணி, தாமோதரன், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் குமரி மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சில ஒன்றியங்களில் 2 இடங்களிலும், சில ஒன்றியங்களில் ஒரு இடத்திலுமாக மொத்தம் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் கூறினர்.

கிள்ளியூர் வட்டார கமிட்டி சார்பில் கருங்கல் பஸ் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார செயலாளர் சாந்தகுமார் தலைமை தாங்கினார். வட்டார கமிட்டி உறுப்பினர்கள் ராஜா, குமார், றசல்ராஜ், எபிலைசியஸ் ஜோயல், ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தோவாளை வட்டாரம் இறச்சகுளம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார செயலாளர் மிக்கேல் தலைமை தாங்கினார். மணி, பேதுரு, அய்யப்பன், சுவிசேஷமுத்து, செல்வம் உள்பட பலர் கலந்

Leave a Reply